Posts

Showing posts from July, 2015

Ramaar Paalam

Image
இராமர் பாலம்  இராமேஸ்வரத்திற்கும், இலங்கையில் உள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே உள்ள சுண்ணாம்பு கற்களால் ஆன ஆழமற்ற மேடுகளாகும். 30 கி .மீ   நீளம் கொண்ட இந்த பாலம் மன்னார் வளைகுடாவையும், பாக்ஜலசந்தியையும் பிரிக்கிறது. இந்த பாலத்தில் கடலின் ஆழம் சுமார் 3 அடி முதல் 30 அடி வரையே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலும் உள்ளன. இராமாயணத்தில் இராமர் கடலைக் கடந்து இலங்கை சென்று இராவணனிடம் இருந்து சீதைஐ மீட்பதற்கு வானரங்கள் கட்டிய பாலம் பற்றிய குறிப்புகளை காணபடுகிறது. இந்த பாலம் அதுவாக இருக்கும் என்று பலர் நம்புகின்றனர். நாசா விண்வெளி நிறுவனம் எடுத்த புகைபடத்தில் காணப்படும் எந்த பாலம் இதற்கு சான்று என்கின்றர். சிலர் 3500 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டது என்றும், சிலர் இயற்கையாகவே அமைந்தது என்றும் கூறுகின்றனர்.

Important Facts about madurai

Image
மதுரை சுமார் 22 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 136 மீட்டர்கள் (1446 அடி ) உயரத்தில் அமைந்துள்ளது மதுரை. அமைவிடம் 9-93*N , 78-12*E காலவலயம் IST - ஒ.ச.நே.+5.30. கோடை காலம் இங்கு அதிகம். உச்சபட்ச வெப்பநிலையாக 37.1 டிகிரி செல்சியஸ்  என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தருகிறது. குறைந்த பட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ். இங்கு சராசரி மழை அளவு 85 சென்டிமீட்டர். இங்கு சுற்றுலா வர விரும்புபவர்கள் கால நேரம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. வருடத்தின் அனைத்து நாட்களும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற நாட்களே.

interesting facts about madurai

Image
மதுரையின் பெருமை : தலைசங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்ககள் வைத்து தமிழ் வளர்த்தது இங்கே தான். "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று தைரியமாக சிவபெருமானிடம் நக்கீரர் உரைத்ததும் இதே மதுரையில் தான். சிவபெருமான் 64 திருவிளையாடல் நடத்திய திருத்தலமாக விளங்குவதும் மதுரைதான். என் கணவனை கள்வன் என்று சொல்வதா என்று ஆத்திரத்துடன் தனது கால் சிலம்பை உடைத்து எறிந்ததுடன் கோபாவேசமாக மதுரை நகரையே எரித்து சாம்பலாக்கிய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்ததும் இம்மதுரையில் தான். இந்திரன், வருணன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம் என்ற புகழ் படைத்தது இதே மதுரை தான். முருக பெருமான் திருவருளால் பேசும் திறன் பெற்ற குமரகுருபர் என்று பெயர் பெற்று மீனாட்சியம்மன் பிள்ளைதமிழ் அரங்கேற்றியதும் இத்தலத்தில் தான்.   மகாத்மா காந்தி தனது ஆடம்பர  ஆடைகளை துறந்து சபதம் மேற்கொண்டதும் இம்மதுரையில் தான்.

Why madurai is called as Athens of East?

Image
மதுரை நகரின் கட்டிட கலையும் நகர் அமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரை போல் இருந்ததால் "கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்" என்று மதுரையை பற்றி கிரேக்க யாத்திகர் மெகஸ்தனிஸ் (3ஆம் நூற்றாண்டு ) தனது இண்டிகா என்ற நூலில் குறிபிட்டுள்ளார்.

Other Names of Madurai

Image
மதுரை மாநகருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. மதுரையம்பதி , கூடல்நகர் , கடம்பவனம் , திருவாலவாய் , நான்மாடகூடல், இவை மதுரையின் வேறு பெயர்கள். மதுரையில் மொத்தம் 1000 கோவில்கள் உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இதனால் மதுரைக்கு கோவில் நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. சிவபெருமான் தனது சடையிற் சூடிய பிறையில் கொண்டிருக்கும் அமிர்தமாகிய மதுவை தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கி புனிதமாக்கிய தலமே "மது "ராபுரி என்ற பெயர் பெறக் காரணம் என்பர். மதுராபுரியே பின்னர் சுருங்கி மதுரை ஆகி விட்டது என்றும் சொல்லபடுகின்றது. முற்காலத்தில் கடம்பமரம் நிறைந்து நின்ற கடம்ப காடாக இம்மதுரை காட்சி அளித்ததால் 'கடம்பவனம் ' என்ற பெயர் பெற்றது என்றும் கூறுவார்.

Boundaries of madurai

Image
மதுரை நகரம் மூன்று மலைகளை எல்லைகளாக கொண்டுள்ளது.  யானை மலை,  நாக மலை, பசுமலை. யானை, பாம்பு, பசு இவற்றை குறிக்கும் வகையில் பெயர் சூட்டபட்டுள்ளது. மலைகள் பார்க்கவும் அதன் வடிவிலே இருப்பது தான் அதன் தனி சிறப்பு. மதுரை மாவட்டத்தின் வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே தேனி மாவட்டமும் தெற்கே விருதுநகர் மாவட்டமும் எல்லை மாவட்டங்களாக அமைந்துள்ளன.

Brief history of madurai

மதுரை நகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. பாண்டியர்களின் தலை நகரமாக திகழ்ந்தது. இராமாயணத்தில் கெளடில்யரின்  அர்த்த சாஸ்திரத்தில் இடம்பெற்ற பெருமை இந்நகருக்கு உண்டு.  கி. மு 320 ஆம்  ஆண்டுகளில் சந்திரகுப்த மௌரியர் கால கட்டத்தில் மதுரை மாநகர் இருந்ததாக வரலாறுகள் பறைசாற்றுகின்றன. 

History of Madurai

Image
மதுரையின் உருவான கதை மற்றும் பெயர் வரலாறு :  மதுரை முதலில் ஒரு காடாகவே இருந்தது. ஒரு நாள் விவசாயி ஒருவர் அந்த காட்டின் வழியே சென்ற பொழுது கதம்ப மரத்தின் அடியில் சுயம்பு வை இந்திரன் வணங்கி கொண்டு இருப்பதாய் பார்த்து அரசன் குலசேகர பாண்டியனிடம் போய் கூறவே அவர் காட்டை சுத்தம் செய்து அந்த சுயம்பு லிங்கத்தை சுற்றி கோவில் ஒன்றை கட்டினார். பின்னர் அந்த கோவிலை சுற்றி நகரம் ஒன்று உருவானது. அதுவே மதுரை நகரமாகும். மதுரம் என்ற பெயரே மருவி மதுரை என்றானது. ஒரு முறை சிவன் மதுரையில் தோன்றி னா ர் என்றும் அவரது முடியில் இருந்து வழிந்த தேன் வழிந்த இடம் என்பதை குறிக்கும் வகையில் " மதுரம் " அதாவது இனிப்பு என்ற பொருளில் பெயர் வைக்கப்பட்டது எனவும் கூறுவர். 3 வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மேகச்தனேஷ் மதுரைக்கு வந்தனர். பின்னர் ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் மதுரைக்கு வந்து வணிகம் செய்தனர். 10 ஆம் நூற்றாண்டு வரை மதுரை தழைத்தோங்கியது. ஆனால் பாண்டியர்களின் பரம வைரிகளான சோழர்கள் மதுரை ஐ  கைப்பற்றி கொண்டனர். 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களால் மதுரை ஆளப்பட்டது. 1223இல் பாண்டியர்கள் மதுரை ஐ மீட

Welcome to the blog maduraikaraponnu

வணக்கம் மதுரை மக்களே ! இந்த பதிவு வேறு எந்த ஊரில் உள்ளர்க்கும் இல்லை ! நம்மை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு !