interesting facts about madurai

மதுரையின் பெருமை :

தலைசங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்ககள் வைத்து தமிழ் வளர்த்தது இங்கே தான்.


"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று தைரியமாக சிவபெருமானிடம் நக்கீரர் உரைத்ததும் இதே மதுரையில் தான்.


சிவபெருமான் 64 திருவிளையாடல் நடத்திய திருத்தலமாக விளங்குவதும் மதுரைதான்.


என் கணவனை கள்வன் என்று சொல்வதா என்று ஆத்திரத்துடன் தனது கால் சிலம்பை உடைத்து எறிந்ததுடன் கோபாவேசமாக மதுரை நகரையே எரித்து சாம்பலாக்கிய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்ததும் இம்மதுரையில் தான்.


இந்திரன், வருணன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம் என்ற புகழ் படைத்தது இதே மதுரை தான்.


முருக பெருமான் திருவருளால் பேசும் திறன் பெற்ற குமரகுருபர் என்று பெயர் பெற்று மீனாட்சியம்மன் பிள்ளைதமிழ் அரங்கேற்றியதும் இத்தலத்தில் தான்.
 

மகாத்மா காந்தி தனது ஆடம்பர  ஆடைகளை துறந்து சபதம் மேற்கொண்டதும் இம்மதுரையில் தான்.

Comments

Popular posts from this blog

Boundaries of madurai

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?