History of Madurai

மதுரையின் உருவான கதை மற்றும் பெயர் வரலாறு :


 மதுரை முதலில் ஒரு காடாகவே இருந்தது. ஒரு நாள் விவசாயி ஒருவர் அந்த காட்டின் வழியே சென்ற பொழுது கதம்ப மரத்தின் அடியில் சுயம்பு வை இந்திரன் வணங்கி கொண்டு இருப்பதாய் பார்த்து அரசன் குலசேகர பாண்டியனிடம் போய் கூறவே அவர் காட்டை சுத்தம் செய்து அந்த சுயம்பு லிங்கத்தை சுற்றி கோவில் ஒன்றை கட்டினார். பின்னர் அந்த கோவிலை சுற்றி நகரம் ஒன்று உருவானது. அதுவே மதுரை நகரமாகும்.

மதுரம் என்ற பெயரே மருவி மதுரை என்றானது. ஒரு முறை சிவன் மதுரையில் தோன்றினார் என்றும் அவரது முடியில் இருந்து வழிந்த தேன் வழிந்த இடம் என்பதை குறிக்கும் வகையில் "மதுரம்" அதாவது இனிப்பு என்ற பொருளில் பெயர் வைக்கப்பட்டது எனவும் கூறுவர்.

3 வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மேகச்தனேஷ் மதுரைக்கு வந்தனர். பின்னர் ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் மதுரைக்கு வந்து வணிகம் செய்தனர். 10 ஆம் நூற்றாண்டு வரை மதுரை தழைத்தோங்கியது. ஆனால் பாண்டியர்களின் பரம வைரிகளான சோழர்கள் மதுரை ஐ  கைப்பற்றி கொண்டனர். 13 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களால் மதுரை ஆளப்பட்டது.

1223இல் பாண்டியர்கள் மதுரை ஐ மீட்டனர். பாண்டியர்கள் தமிழ் மொழியை உயிர் என போற்றினர்.தன் கணவன் கோவலனுக்கு நீதி கிடைக்கவில்லைஎன்பதற்காக மதுரை ஐ எரித்த கண்ணகி பற்றிய வரலாறு "சிலப்பதிகாரம் " பாண்டியர்களின் காலத்தில் இயற்றப்பட்டது.

ஏப்ரல் மாதம் 1323இல் மாலிக் கபுர் என்பவர் மதுரையின் ரத்தினங்கள், முத்துகள், அரிய புதையல்களை கொள்ளை அடித்து சென்றார். அவரை தொடர்ந்து மேலும் சில சுல்தான்கள் மதுரை மீது படை எடுத்தனர். மதுரை தில்லி பேரரசின் அடிமையானது.

1371 இல் விஜய நகர பேரரசின் கீழ் மதுரை வந்தது. இந்த வம்சத்தின் அரசர்கள், கைப்பற்றிய நகரத்தை நாயகர்களுக்கு ஆளுமை செய்ய கொடுப்பது வழக்கம். இதற்காக நாயக்கர்களிடம் இருந்து வருடாந்தர பணம் வசூலிப்பர். 1530 இல் கிருஷ்ணா தேவராயர் (விஜயநகர பேரரசர் ) இறந்த பின் நாயக்கர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்ய தொடங்கினர். இவர்களில் திருமலை நாயகர் மிகவும் பிரபலமானவர். 

மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜ கோபுரம், புது மண்டபம் , திருமலை நாயகர் மஹால் ஆகியவை அவரால் கட்டப்பட்டவை ஆகும்.

1781 இல் மதுரை பிரிட்டிஷ்காரர்களின் கைக்கு மாறியது. ஜார்ஜ் ப்ரோச்ட்டர்  தான் மதுரையின் முதல் கலெக்டர் ஆவார்.

சுதந்திரத்துக்கு பின் மதுரை தமிழ்நாட்டின் முதன்மை நகரமாக திகழ்கிறது. 1984 இல் மதுரை இரண்டாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் உருவானது. 1997 இல் மீண்டும் மதுரை இரண்டாக பிரிக்கப்பட்டு  தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

Boundaries of madurai

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?